அரசியல் தலைவர்கள் சமுதாயத் தலைவர்கள் பங்கேற்பு .
சிவகங்கை:டிச:26
சிவகங்கையில் ராணி வேலுநாச்சியாரின் நினைவிடமானது சண்முகராஜா கலையரங்கின் வடபுரத்தில் தெப்பக்குளக்கரையில் அமைந்துள்ளது. இந்த நினைவிடத்தில் ஆண்டுதோறும் வேலு நாச்சியாரின் நினைவு நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது . ராணி வேலுநாச்சியார் இழந்த சிவகங்கைச் சீமையை வெள்ளையர்களோடு போரிட்டு மீட்டெடுத்த பெருமை இவருக்கு உண்டு. வேலு நாச்சியார் நினைவு நாள் விழாவில் சிவகங்கை மன்னர் பரம்பரையினர் வேலுநாச்சியார் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் சமுதாயத் தலைவர்கள் பங்கேற்று நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள் .
அப்போது சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் , தேவஸ்தான நிர்வாகிகள் , லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் , சிவகங்கை தமிழ்ச்சங்கம் சார்பில் புலவர் பகீரத நாச்சியப்பன் ,
அதிமுக கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் , மாவட்டச் செயலாளர் பி .ஆர். செந்தில்நாதன் , தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் துரைகருணாநிதி அம்மா மக்கள். முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் தேர்ப்போகி பாண்டி , அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் மாவட்ட செயலாளர் அசோகன் , தாய்த் தமிழர் கட்சியின் சார்பில் அதன் நிறுவனர் பாண்டியன் , பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நகரத் தலைவர் உதயா , முக்குலத்தோர் எழுச்சிக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் கவிக்குமார் , அனைத்து அகமுடையார் கூட்டமைப்பின் சார்பில் ராஜ்குமார் அகமுடையார் , முக்குலத்தேவர் புலிப்படையின் பொதுச் செயலாளர் பாண்டித்துரை தேவர் , தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் திருமாறன் ஜி , பிற்படுத்தப்பட்டோர் சமுதாய மக்களின் உரிமைக்கான கூட்டமைப்பின் நிறுவனர் ரத்தின சபாபதி , தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில பொதுச் செயலாளர் சரவணன் தேவா , தமிழ்நாடு மாநில யாதவர் சங்கத்தின் சார்பில் மாநில செயலாளர் சரவணன் ,நேதாஜி சுபாஷ் சேனையின் மாநிலச் செயலாளர் சுமன்தேவர் , மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞரணி துணைத் தலைவர் செந்தில்ராஜ் , சிவகங்கை நகர் மன்றத் தலைவர் சி.எம். துரை ஆனந்த் , துணைத்தலைவர் கார்கண்ணன் , முன்னாள் தலைவர் சாந்தி மனோகரன் , தமிழ்நாடு கள்ளர் படைப்பற்று மாநில தலைவர் வசந்த் காடவராயன் , பசும்பொன் தேசிய கழகம் மாநில தலைவர் ஜோதி முத்துராமலிங்கம் , தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தெற்கு ,வடக்கு மாவட்ட செயலாளர்கள் முத்துபாரதி , ஜோசப் தங்கராஜ் ,
நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் , மாவட்டச் செயலாளர் முத்துக்குமார் , மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் மாவட்ட பொறுப்பாளர் சகாயம் , செய்தி தொடர்பாளர் அமரன் கார்த்திக் , உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமுதாய தலைவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர் .
இதன் முதல் நாளில் வேலுநாச்சியார் நினைவிடத்தில் 108 –
திருவிளக்கு பூஜை நடைபெற்றது .