மதுரை ஜூன் 19
மதுரை மண்டல ரயில்வே கோட்டம் அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.
பெங்களூர் அருகே உள்ள எஸ்வந்த்பூர் வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம் – ஹுப்பாளி – ராமேஸ்வரம் வாராந்திர ரயில் சேவை ஜூன் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மீண்டும் ஆறு மாதங்களுக்கு டிசம்பர் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. அதன்படி சனிக்கிழமைகளில் காலை 06.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.15 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும் ஹுப்பாளி – ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் (07355) ஜூன் 6 முதல் டிசம்பர் 28 வரை இயக்கப்படும் மறு மார்க்கத்தில் ராமேஸ்வரத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 07.25 மணிக்கு ஹுப்பாளி சென்று சேரும் ராமேஸ்வரம் – ஹுப்பாளி வாராந்திர எக்ஸ்பிரஸ் (07356) ஜூன் 7 முதல் டிசம்பர் 29 வரை இயக்கப்படும் இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு விரைவில் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.