தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் ராமநாதபுரம் மாவட்ட பொதுக்குழு கூட்டம்
மாநிலத் தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் தலைமை வகித்தார்
ராமநாதபுரம், ஜுலை 15-
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்தல் மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் தலைமையிலும் மாநில பொதுச் செயலாளர் வேல்முருகன் மாநில பொருளாளர் மகேஸ்வரன் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் தேனி குமரேசன் முன்னிலையிலும் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் செந்தாமரை வரவேற்புரை ஆற்றினார். நிர்வாக அறிக்கையை மாவட்ட செயலாளர் கமுதி முருகன் வாசித்தார். கூட்டத்தில் தேனி சுந்தரபாண்டியன் மற்றும் மாநில இணைச்செயலாளர் கமுதி ஜெயவரதன் மாநில செயற்குழு உறுப்பினர் முதுகுளத்தூர் செல்வகுமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தலைவர் கற்குவேல், சிவகங்கை மாவட்ட தலைவர் பாக்கியராஜ், அனைத்து ஒன்றிய நிர்வாகிகள் வாழ்த்தி பேசினார்.
கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட தலைவராக முருகன் மாவட்ட செயலாளராக முத்துராமலிங்கம் மாவட்ட பொருளாளராக சிவகாமி மாவட்டம் மகளிர் அணி செயலாளராக கலைச்செல்வி மற்றும் இணை துணை நிர்வாகிகள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் மாலை அணிவித்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
தொடர்ந்து கூட்டத்தில் ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க தமிழக அரசை கேட்டுக் கொள்வது, ஊராட்சி செயலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கவுன்சிலிங் முறையில் பணி மாறுதல் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.