கரூர் மாவட்டம் – ஆகஸ்ட் – 10
மழைநீர் சேகரிப்பு குறித்த மாணவ-மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை
மாவட்ட ஆட்சித் தலைவர் மீ.தங்கவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு தொடர்பாக செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகன சேவையை மாவட்ட ஆட்சித் தலைவர் மீ.தங்கவேல் கொடியசைத்து தொடங்கி வைத்து, மாணவ – மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றார்.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தாவது.
தமிழ்நாடு அரசு மழை நீர் சேகரிப்பு, குடிநீர் சிக்கனம் மற்றும் நீர் மேலாண்மை குறித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பாக மழை நீரை வீணாக்காமல் சேமித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும், நீர்ப்பாசனத்திற்கும் , நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கு வீடுகள் மற்றும் நிறுவனங்களின் கட்டிடங்களின் மேற்கூரைகளில் இருந்து இதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புகள் மூலமாக தரைவழியாக சேகரிக்கப்படும் மழைநீர் குடிநீருக்கான முக்கியமான ஆதாரமாக இருக்கிறது.
வேறுவகை நீர் ஆதாரம் இல்லாத போது, ஆண்டு மழைப்பொழிவு கூடுதலான இடங்களில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக இல்லங்களில் மழைநீர் வடிகால் அமைப்பு ஏற்படுத்துவது சிறப்பானது. இதை வலியுறித்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன்மூலம் நமது குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன் நமக்கு கிடைத்த நீர் எதிர்கால சந்ததியருக்கும் கிடைக்கும் வகையில் நாம் செயல்பட வேண்டும் என்பதற்காக இது போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டியுள்ளது.
மேலும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு குறும்படங்கள் மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் பொது மக்கள் அதிகம் கூடுமிடங்களில் திரையிடப்பட உள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல் தெரிவித்தார்.
முன்னதாக தாந்தோணி அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்திலிருந்து தாந்தோணி அரசு கலைக்கல்லூரிவரை சென்றடைந்தது அதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் வீராசாமி, உதவி நிர்வாக பொறியாளர் சீனிவாசன் மற்றும் அரசு கலைக்கல்லூரி மாணவ – மாணவியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.