சேலம் மாவட்டம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சேலம் சுந்தரராஜ் அருகே உள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாநில பொதுச் செயலாளர் நாகா ஆர்.அரவிந்தன் தலைமையில் மாநில காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் வசந்தம் சரவணன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஆரிய வைசிய முன்னேற்ற பேரவை நிர்வாகிகள் மருத்துவர் ஓசோ முரளி,கேசவன் பஞ்சாயத்து ராஜ் மாநகரத் தலைவர் மாண்பாண்டியன் மற்றும் கமிட்டி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.