புதுக்கடை, மார்-3
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும், கிள்ளியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, இனயம் புத்துன்துறை புனித அந்தோணியார் தேவாலயத் திருவிழாவில் ஏணி கொண்டு சென்ற போது தாழ்வாக சென்ற மின்சார கம்பியில் ஏணி உரசியதில் மின்சாரம் தாக்கியதில் விஜயன் (52), ஐஸ்டஸ்(35), சோபன் (45)
மைக்கேல் பின்ற(42) ஆகியோர் உயிரிழந்தனர். அந்த குடும்பங்களுக்கு உடனடியாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 5 லட்சம் ரூபாய் பெற்றுக் கொடுத்து, நேற்று அவர்களின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, அவர்களது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து உயிரிழந்த நான்கு பேரின் குடும்பங்களுக்கும் தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ. 1 லட்சம் ரூபாய் வீதம் நிவாரண தொகை வழங்கினார்.