சங்கரன்கோவில். ஜூலை.24.
சங்கரன்கோவிலில் அனைத்துலக பிரசித்தி பெற்ற ஆடித்தபசு திருநாள் ஜூலை 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது. இது குறித்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக முதல்வரின் திராவிட மாடல் பொற்கால ஆட்சியில் நடைபெற்ற ஆயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட சங்கரன்கோவில் சங்கரநாராயணர் – கோமதி அம்மன் திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா ஒட்டுமொத்த சங்கரன்கோவில் மக்களின் நீண்ட எதிர்பார்ப்பில் சிறப்புற நடைபெற்றது, ஒற்றை ஊசியின் மீது தவம் செய்து அரியும், சிவனும் ஒன்று என்ற ஒற்றுமையை எடுத்துரைக்கும் விதமாக நடைபெற்ற தவசுக்காட்சி திருவிழாவில் கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கரநாராயணராகவும், அன்று இரவில் சங்கரலிங்கமாகவும் காட்சியளிக்கும் வைபவம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து ஆடித்தபசின் கடைசி திருநாளான 12ம் திருநாள் வெகு விமர்சையாக நேற்று முன்தினம் நடந்தது.இதற்கு சிறப்பான முறையில் ஒத்துழைப்பு வழங்கிய சங்கரன்கோவில் பொதுமக்களுக்கும் , ஏற்பாடுகளை திட்டமிட்ட அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும், கோயில் அறங்காவலர்களுக்கும்,முறையான பாதுகாப்பு அளித்த காவல் துறையினருக்கும், சிறு சுகாதார இழுக்கும் ஏற்படா வண்ணம் சிறந்த முறையில் செயல்பட்ட தூய்மை காவலர்களுக்கும், அவர்களை சிறப்புற வழிநடத்திய நகராட்சி நிர்வாகத்தினருக்கும், மின்சாரதுறை, சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை, குடிநீர் வடிகால் வாரியம், போக்குவரத்து துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறையினருக்கும், தன்னார்வலர்களுக்கும் ,கடல் கடந்து வாழும் சங்கரன்கோவில் மக்களும் சிறு சங்கடமும் இன்றி தபசினை காணும் விதமாகவும், சங்கரன்கோவில் பெருமையை உலகறியச் செய்யவும், தொடர் நேரலைகள் மூலமும், அழகான புகைப்படங்கள் மூலமும் சங்கரன்கோவிலின் பெருமையை இணையம் வாயிலாக அகிலத்தின்் எல்லா எடுத்துச் சென்ற புகைப்பட,காணொளி கலைஞர்களுக்கும் ,நிருபர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.