சங்கரன்கோவில்.ஜூன்.26.
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் இருதய சிகிச்சை சிகிச்சை பிரிவு துவக்க வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியனை சந்தித்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கோரிக்கை மனு அளித்தார். மனுவில்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை மாவட்டத்தில் தென்காசிக்கு அடுத்தபடியாக உள்ள பெரிய மருத்துவமனை ஆகும். சங்கரன்கோவில்
பகுதியை சுற்றி சுமார் 185க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தனியார் மருத்துவமனக்கு சென்று சிகிச்சை பெறும் அளவுக்கு வசதிகள் இல்லாததால் பெரும்பாலானோர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு தான் சிகிச்சைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.இந்த மருத்துவமனைக்கு சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து தினமும் வெளிநோயாளிகளாக ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்நோயாளியாக 186 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு காசநோய் பிரிவு ,அறுவை சிகிச்சை அரங்கம் ,சிடி ஸ்கேன் வசதி, நவீன லேப் வசதி ,சித்தா மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம் ,இயற்கை மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றது .ஆனால் சங்கரன்கோவில் மருத்துவமனையில் தற்போது இதய நோயாளிகளாக வருபவர்கள் சிகிச்சை பெற முடியாததால் 55 கிலோமீட்டர் தூரம் உள்ள திருநெல்வேலிக்கும், 40 கிலோமீட்டர் தூரம் உள்ள தென்காசிக்கு மருத்துவமனைக்கும் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சை பெறுவதற்கான நவீன பரிசோதனை கருவிகளுடன் கூடிய வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் எனவும் ,அதற்கான சிறப்பு மருத்துவர்களை நியமிக்க வேண்டும் எனவும் ,இதனால் இந்த பகுதி மக்கள் இருதய சிகிச்சையை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் செய்திட முடியும் எனவும் ,இதுகுறித்து அமைச்சர் நடவடிக்கை எடுத்து சங்கரன்கோவில் மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவு துவக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் இதுகுறித்து ஆலோசனை செய்து இருதய சிகிச்சை பிரிவு அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார.