சங்கரன்கோவில்.ஜூலை.11.
சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மானூர் ஒன்றியத்திற்கு ஒன்றியத்தில் சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி திருநெல்வேலி கலெக்டர் கார்த்திகேயனை சந்தித்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வன்னிக்கோனேந்தல் பிர்க்காவில் வன்னிக்கோனேந்தல்
முதல் ருக்மணியம்மாள்புரம் சாலை, கருப்பனூத்து முதல் வெயிலுகந்தபுரம் ரோடு (வழி) தெற்கு பூலாங்குளம் சாலை வன்னிக்கோனேந்தல் ஊராட்சி ராஜபாளையம் – சங்கரன்கோவில் மெயின்ரோட்டிலிருந்து அடைக்கலாபுரம் வரை உள்ள சாலை சாலைபுதுார் முதல் சொக்கநாச்சியாள்புரம் வரை உள்ள சாலை,மூவிருந்தாளி,மேலஇலந்தைக்குளம் முதல் கட்டாரங்குளம் வரை உள்ள தார்சாலை தேவர்குளம் முதல் கண்ணாடிகுளம் வரை உள்ள தார்சாலை,பாலுடையார் கோவில் முதல் முத்தம்மாள்புரம் வரை உள்ள தார்சாலை, ஆகிய கிராமங்களில் சேதம் அடைந்த தார் சாலைகளை முதல்வர் கிராம சாலை திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும், இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் , மேலும் விவசாயிகளின் நலன் கருதி மக்களின் முதல்வர் முகாமினை இந்த பகுதியில் நடத்த வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிகழ்வின் போது யூனியன் சேர்மன் ஸ்ரீலேகா அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, பால்ராஜ், அன்பழகன், நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.