உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை மனு/
சங்கரன்கோவிலில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது முகாமில் சங்கரன்கோவில் எம் எல் ஏ கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியரிடம் சங்கரன் கோவில் சட்டமன்ற தொகுதியில் விரைந்து முடிக்க வேண்டிய திட்டப்பணிகள் குறித்து கோரிக்கை மனு அளித்தார் மேல நீலிதநல்லூர் ஊத்துமலை சாலையில் 300 ஏக்கர் பரப்பளவில் சிட்கோ தொழிற்பேட்டை சோலார் பூங்கா சின்ன கோவிலாங்குளம் ஆட்டின ஆராய்ச்சி மையம் பணி குருக்கள்பட்டி தொழிற் கல்வி மையம் பணி சங்கரன்கோவில் வட்டாரத்தில் பூக்கள் அதிகம் உற்பத்தியாவதால் நகர் பகுதியில் வாசனை தொழிற்சாலை அமைக்கும்பணி நகர் பகுதி யின் உள்ள ஓய்வு விருந்தினர் மாளிகை பொதுப்பணி துறையால் விரிவுபடுத்திடவும் சங்கரநாராயணர் திருக்கோவில் ஆவுடை பொய்கை தெப்பம் சீரமைக்கும் பணி துரித படுத்தவும் திட்ட மதிப்பீடு செய்து பணியினை துவக்கவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புறவழிச் சாலை அமைக்கும் பணி களையும் முதல்வரால் உத்தரவிடப்பட்ட ஞாயிறு தேவ பாவாணருக்கு நகராட்சியால் ஒப்புதல் வழங்கப்பட்ட இடத்தில் மணிமண்டபம் அமைத்திடவும் திருவேங்கடம் செல்லும் சாலை விரிவுபடுத்திடவும் அரசு மருத்துவமனையில் மகப்பேறு வார்டு கட்டிடம் தனியாக அமைக்கவும் அரசு மருத்துவமனையில் கலைஞர் காப்பீடு திட்ட அட்டை வழங்கிடவும் புதியதாக கட்டப்பட்ட காய்கறி மார்க்கெட்டிற்கு கலைஞர் நூற்றாண்டு தினசரி அங்காடி என பெயர் வைக்கவும் அரசு அறிவித்தபடி மார்க்கெட்டில் ஏற்கனவே கடை வைத்திருந்த வியாபாரிகளுக்கு புதிதாக கட்டப்பட்ட மார்க்கெட்டில் கடைகள் வழங்கிட முன்னுரிமை அளிக்கும்படியும் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய திட்ட பணிகளின் கோரிக்கைகள் குறித்து தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.