சங்கரன்கோவில். ஜூலை.17.
தென்காசி வடக்கு மாவட்டம் மருத்துவர் அணி கூட்டம் சங்கரன்கோவிலில் வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வைத்து நடந்தது. கூட்டத்திற்கு மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம் தலைமை வகித்தார் .மாவட்ட மருத்துவர் அணி தலைவர் சுமதி, மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட துணைச் செயலாளர்கள் புனிதா ராஜதுரை, மாவட்ட பொருளாளர் சரவணன் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசியதாவது
திமுகவில் மிக முக்கிய அணியாக உள்ளது மருத்துவ அணி.தென்காசி வடக்கு மாவட்ட மருத்துவ அணி சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன எனவும், பொதுமக்களிடம் உடல் தானம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும், மருத்துவ அணி சார்பில் இலவச மருத்துவ முகாம்கள் அனைத்து கிராம பகுதிகளிலும் நடத்த வேண்டும் எனவும் பேசினார் . இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அறிவித்ததற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளருக்கு தென்காசி வடக்கு மாவட்டத்திலிருந்து அதிக வாக்குகளை பெற்று தந்த வடக்கு மாவட்ட செயலாளர் ராஜாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கர பாண்டியன், சேர்மத்துரை, வெள்ளத்துரை,நகரச் செயலாளர் சங்கரன்கோவில் பிரகாஷ் ,புளியங்குடி அந்தோணிசாமி, மாவட்ட மருத்துவ அணி துணைத் தலைவர் பவித்ரா, மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர்கள் டாக்டர்கள் பேச்சியம்மாள், முத்துக்குமார், குருராஜ், சுரேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.