சங்கரன்கோவில்.ஜூலை.10.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோட்டம் கலிங்கப்பட்டி உபகோட்டம் குருவிகுளம் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட மருதன்கிணறு பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஆவுடையாள்புரம் கிராமத்தில் சுமார் 70 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். 8ஆண்டுகளாக சிரமப்படும் சுற்றியுள்ள கிராம மக்களின் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதிய மின் மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து உடனடியாக அதிகாரிகளிடம் பேசி புதிய மின்மாற்றி அமைக்க ராஜா எம்எல்ஏ நடவடிக்கை எடுத்தார். அதனைத் தொடர்ந்து 25 கே வி குறைந்தளவு மின் மாற்றியை உடனடியாக மாற்றம் செய்து அதே பகுதியில் 63 கேவிஏ மின் மாற்றி அமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். மேலநீலிததநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரிய துரை,உதவி செயற்பொறியாளர் தங்கராஜ்,உதவி மின் பொறியாளர் செந்தில்நாதன், ஊராட்சி மன்ற தலைவர் மாவட்ட பிரதிநிதி தங்கதுரை ( எ )சின்ன பேச்சிமுத்து மற்றும் பலர் முன்னிலை வகித்தனர் இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய மின்மாற்றி மக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். நிகழ்வில் சங்கரன்கோவில் நகரச் செயலாளர் பிரகாஷ்,
சண்முகப்பாண்டியன், மாணவரணி வீரமணிகண்டன்,
கிளைக் கழகச் செயலாளர் முத்தரசு, சுப்பிரமணியன் ,ராமகிருஷ்ணன், சுவாமிதாஸ் ,மாதவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்… தங்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.