லிம்போபா புற்றுநோயால் உயிரிழந்த சிறுவனின் சகோதரிகளுக்கு படிப்பு செலவுக்கு ரூபாய் 4, லட்சம் ராஜா எம்எல்ஏ வழங்கினார்
சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் மலையடிப்பட்டி யைச் சேர்ந்த விவசாயி மகேந்திரன் இவரது மனைவி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார் மகேந்திரனுக்கு மகன் பொன்மாறன் வயது 4 மகள்கள் பொன் ஸ்ரீ, 10, வயது பொன்மலர் வயது 8 ஆகியோர் உள்ளன ர் இதில் மகன் பொன்மாறன் லிம்போபா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கழுத்தில் கட்டி ஏற்பட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக பாலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் சிகிச்சை பலனின்றி பொன்மாறன் இறந்து விட்டதால் கடந்த 12ஆம் தேதி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர் போராட்டத்தை கேள்விப்பட்ட சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார் தேவையான உதவிகளை தானே செய்வதாக கூறினார் தான் உறுதி அளித்தது போல் பொன்மாறன் சகோதரிகளுக்கு எம்எல்ஏ ராஜா தனது சொந்த செலவில் இரண்டு லட்சம் வீதம் இரண்டு பேருக்கு ரூபாய் 4 லட்சம் ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்து பாஸ்புத்தகத்தை பொன்மாறன் சகோதரிகளிடம் வழங்கினார் நிகழ்வில் பொன்மாறனின் தந்தை மகேந்திரன் தாய் மாமா சூரிய பிரகாஷ் சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் குருவிகுளம் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் மாடசாமி கவுன்சிலர் வெங்கடேஷ் ஜெயக்குமார் பாலாஜி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் பொன்மாறனின் குடும்பத்தினருக்கு தேவை யறிந்து உதவி செய்த மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.