திருப்புவனம் அக்டோபர் 14
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நேற்று இரவு நான்கு மணி நேரம் தொடர்ந்து கனமழை பெய்தது இதனால் சாலைகளிலும் தெருக்களிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது இதன் காரணமாக மதுரை ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் இருந்து திருப்புவனம் ஊருக்குள் செல்லும் ரோட்டில் மழைநீர் தேங்கியுள்ளது.
இதன் காரணமாக பல பேருந்துகள் ஊருக்குள் வராமல் நான்கு வழிச்சாலை வழியாகவே சென்று விடுகிறது. இதனால் திருப்புவனத்தில் இருந்து மானாமதுரை பரமக்குடி ராமநாதபுரம் போன்ற ஊர்களுக்கு செல்லும் பயணிகளும் மதுரையை நோக்கி செல்லும் பயணிகளும் பெரிதும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மேலும் இந்த பாலத்தின் கீழ் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ள காரணத்தினால் நான்கு சக்கர வாகனமும் இரண்டு சக்கர வாகனமும் தவறான பாதையில் செல்கின்றன இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும் இந்த மழை நீர் வடிவதற்காக இருக்கக்கூடிய பாதையில் பேரூராட்சியினர் குப்பைகளை கொட்டி உள்ளதால் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த இடத்தகல் பெரும் சிரமத்துடன் கடந்து செல்லும் காட்சி.