சங்கரன்கோவில். டிச.14.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதிகளில் கடந்த புதன் கிழமை இரவு முதல் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் நகரில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கும் சூழ்நிலை நிலவியது. இந்த நிலையில் இது குறித்த தகவல் அறிந்த தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ நேரடியாக சென்று சங்கரன்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட தென்றல் நகர், கக்கன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளை ஆய்வு செய்தார். மேலும் அந்த பகுதியில் தேங்கியிருக்கும் மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தினார் . அதனை தொடர்ந்து பொதுமக்களிடம் பேசிய ராஜா எம்எல்ஏ வெள்ளம் பாதிப்பு தொடர்பாக எந்த ஒரு உதவி தேவைப்பட்டாலும் தன்னை அணுகலாம் என கேட்டுக்கொண்டார். மேலும் மழை நேரங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார் இந்த நிகழ்வின்போது சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், வார்டு செயலாளர் தடிகாரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்