நாகர்கோவில் மே 17
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராணி தோட்டம் பனிமனையிலிருந்து நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் வழியாக தினசரி நெல்லை திருச்செந்தூர் மதுரை திருச்சி சென்னை கோவை ஈரோடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன அந்த வகையில் நேற்று மாலை நாகர்கோவிலில் இருந்து வள்ளியூர் வழியாக திருச்செந்தூர் சென்ற அரசு பேருந்து வள்ளியூரில் பெய்து வந்த கனமழையின் காரணமாக ரயில்வே சுரங்க பாதையில் 10 அடி உயரம் கொண்ட தண்ணீரில் சிக்கி பேருந்தில் இருந்த 80க்கும் மேற்பட்ட பயணிகளை வள்ளியூர் தீயணைப்புத் துறையினர் வந்து உயிருடன் மீட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நாகர்கோவில் ராணி தோட்டம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அரசு பேருந்து ஓட்டுனர் சசிக்குமாரின் கவன குறைவே காரணம். 10 அடி உயரத்திற்கு ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் இருந்தும் சுதாரித்துக் கொள்ளாமல் பேருந்தை உள்ளே இறக்கியதால் அவருடைய கவனக்குறைவு தான் காரணம் என தெரிய வந்ததால் அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி பிறப்பித்துள்ளார்.