கிருஷ்ணகிரி,ஜுன்.20- கிருஷ்ணகிரி நகர காங்கிரஸ் மற்றும் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தியின் 54 -வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ராகுல்காந்தி பூரண உடல் நலத்துடன் நீடுழிவாழ வேண்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தியின் பிறந்தநாள் விழா கிருஷ்ணகிரி பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் தளபதி ரகமத்துல்லா, நகர காங்கிரஸ் தலைவர் லலித்ஆண்டனி ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் கலந்துகொண்டு சுமார் 500க்கும் மேற்பட்ட, ஏழை எளியவர்களுக்கு வேஸ்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து மாநில பொதுச் செயலாளர் ஏகாம்பாவாணன் முன்னாள் மாவட்ட தலைவர்கள் நாஞ்சில் ஜேசு, நாராயணமூர்த்தி, ராஜகுமாரவேல், கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரகு, அகில இந்திய காங்கிரஸ் முன்னால் உறுப்பினர் துரை என்ற துரைசாமி, டாக்டர் அமானுல்லா, ஆகியோர்கள் கேக் வெட்டி பொதுமக்களுக்கு
இனிப்புகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் ராகுல்பேரவை குட்டி (எ) விஜயராஜ், மாவட்டச் செயலாளர் சக்கரவர்த்தி, மனித உரிமை மாவட்ட தலைவர் நாகராஜ், நகர மன்ற உறுப்பினர் விநாயகம், முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் அர்னால்ட் ரமேஷ், முபாரக், மாவட்ட பொதுச் செயலாளர் அப்சல், ஓ.பி.சி மாவட்ட தலைவர் ஆஜித்பாஷா, எஸ்.சி.எஸ்.டி பிரிவு ஆறுமுகசுப்ரமணி உள்ளிட்ட ஏராளமானவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.