தஞ்சாவூர், செப்.17.
தஞ்சை காவேரி சிறப்பு அங்காடி யில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பொருட்களை காட்சிப் படுத்த வேண்டும் என்று கூட்டுறவு த்துறை கூடுதல் தலைமை செயலாளர் இராதாகிருஷ்ணன் அறிவுரை வழங்கினார்.
தமிழக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் இராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் தஞ்சை வந்தார். அவர் தஞ்சையை அடுத்த மருங்குளத்தி ல் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள் முதல் நிலையத்தில் ஆய்வு மேற் கொண்டார்.
அப்போது விவசாயிகளிடம் நெல் கொள்முதல் குறித்து கருத்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் தஞ்சாவூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் கீழ் இயங்கும் காவிரி சிறப்பங்காடியில் ஆய்வு மேற்கொண்டார். மளிகை, எழுது பொருட்கள் விற்பனை பிரிவு, சுயசேவை பிரிவு உட்பட ஒவ்வொரு பிரிவாக சென்று நேரில் பார்வை யிட்டு விற்பனைகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, காவேரி சிறப்பங்காடி யில் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் பொருட்களை காட்சிப் படுத்த வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் என்னென்ன பொருட்கள் கிடைக்கும் என்பதை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
பண்ணை பசுமை காய்கறி பிரிவில் பழமுதிர் சோலை போல் காய்கறிகளையும் பழங்களையும் விற்பனைக்கு வைக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால் விற்பனை அதிகரித்து அதிக லாபத்தை ஈட்ட முடியும்.
சென்னையில் பல்வேறு இடங்களில் அமுதம் கூட்டுறவு அங்காடியில் இவ்வாறு செய்து வருவதால் அதிக லாபம் ஈட்டி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தமிழக முதல்வரும், கூட்டுறவுத் துறை அமைச்சரும் நுகர்பொருள் அங்காடிகள் மக்களை கவரும் வகையில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு ள்ளார்கள் .
அவர்களது ஆலோசனையின் படி அனைத்து கூட்டுறவு அங்காடி களும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த பண்டகசாலை கடந்த 10 ஆண்டுகளாக லாபத்தில் இயங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக ரூ.50 லட்சம் வரை லாபம் ஈட்டி வருகிறது. தமிழகத்திற்கு கூடுதலாக கோதுமை ஒதுக்க வேண்டும் என்று தமிழக உணவு துறை அமைச்சர் டெல்லியில் மத்திய அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளா ர். அதன்படி மத்திய அரசு விரை வில் கூடுதலாக கோதுமை வழங் கும் என்று எதிர்பார்க்கிறோம். அவ்வாறு கூடுதலாக வழங்கினால் ரேஷன் கடைகளில் பொதுமக்களு க்கு கோதுமை தட்டுப்பாடு இன்றி கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக காவிரி சிறப்பு அங்காடி க்கு வந்த கூடுதல் தலைமை செயலாளர் இராதாகிருஷ்ணனை கூட்டுறவுத்துறை இணைப் பதிவாளர் தமிழ் நங்கை, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை செயலாட்சியர் மற்றும் துணைப் பதிவாளர் பழனியப்பன் தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி செயலாட்சியர் மற்றும் இணைப் பதிவாளர் பிரபுபணியாளர்கள் வரவேற்றனர்.