பரமக்குடி,பிப். 25 : பரமக்குடியில் ராமநாதபுரம் மாவட்ட அளவிலான ராக்கெட் பந்து விளையாட்டு அறிமுக பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
தமிழக முழுவதும் ராக்கெட் பந்து விளையாட்டு அறிமுக பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. புதிதாக ராக்கெட் பந்து விளையாட்டு தொடங்கப்பட்டுள்ளதால், மாணவ மாணவிகளுக்கு விளையாடுவதற்கான பயிற்சிகள் மாவட்டம் தோறும் தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக,
ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் தமிழ்நாடு ராக்கெட் பந்து சங்கம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான ராக்கெட் பந்து விளையாட்டு அறிமுக பயிற்சி முகாம், பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருகின்ற வியாழக்கிழமை 27 ஆம் தேதி காலை 6.00மணி முதல் ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. அன்று மார்ச் மாதம் கரூரில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு மாவட்ட அளவில் அணி தேர்வு செய்யப்படும். பள்ளிகளில் படிக்கும் 16 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகளை பயிற்சியில் கலந்து அறிவுறுத்தப்பட வேண்டும், மேலும், விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகள் பொருளாளர் சதீஷ் பாபு, செயலாளர் கார்த்திக், துணைச் செயலாளர் சரவணன், துணை பொருளாளர் சஞ்சய் துரை ஆகியோரை தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டிய தொடர்பு எண்கள் 9965892407..9566649662 என மாவட்டத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.