சென்னை, ஆகஸ்ட்- 24,
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) (பிஎஸ்இ: 532540, என்எஸ்இ: டிசிஎஸ் –
நடத்திய வருடாந்திர வினாடி- வினா போட்டியான டிசிஎஸ் இன்க்யூசிட்டிவ் சென்னை பதிப்பில், 80 பள்ளிகளைச் சேர்ந்த 1300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
டிசிஎஸ் இன்க்யூசிட்டிவ் வினாடி – வினா போட்டியானது 8 முதல் 12 -ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு அறிவுத்திறனை வெளிப்படுத்த உதவியிருக்கிறது. இதன் மூலம் சென்னையில் உள்ள மாணவர், மாணவிகள் தங்களது அறிவுத்திறனை வெளிப்படுத்த ஒரு
தளமாக இந்த வினாடி -வினா போட்டி அமைந்திருந்தது.
சென்னை மியூசிக் அகாடமி ஆடிட்டோரியத்தில் இறுதிப் போட்டியில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
மிகவும் கடினமான
ஐந்து சுற்றுகள் கொண்ட வினாடி – வினா போட்டிக்குப் பின், கோட்டூர்புரம் ஏ.எம்.எம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆர்யன் கோஷ்(16) வெற்றி பெற்றார்.
அண்ணாநகர் சின்மயா வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த பிரணவ் சந்தீப் (16)
2ஆம் இடத்தை பிடித்தார். முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருக்கும் மாணவர்கள் இருவரும் அடுத்து வரவிருக்கும் தேசிய அளவிலான இறுதிப் போட்டியில் சென்னையைப் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் கலந்து கொள்வார்கள். இறுதிப் போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 11 பிராந்திய சுற்றுகளில் வெற்றி பெறும் சாம்பியன்களுடன் இவர்கள் இருவரும் போட்டியிடுவார்கள்.
இந்நிகழ்வில், டிசிஎஸ் சென்னை நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் சென்னை மண்டலத் தலைவர் சுரேஷ் ராமன்
உடன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பிரிட்டன் தூதாக துணை ஆணையர் ஆலிவர் பால்ஹட்செட்
விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.