கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி ஊராட்சியில் பொதுமக்களுக்கு திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை நன்றி தெரிவித்து 7 கோடியே 12 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை திட்ட மேம்பாட்டு பணியினை பூஜை செய்து துவக்கி வைத்தார்
கந்திலி:ஆக:21, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களுக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற சி.என் அண்ணாதுரை நன்றி தெரிவித்தார்.
செல்லரப்பட்டி காளியம்மன் கோவில் முதல் ஆதியூர் ஊராட்சி வரை 6 கி.மீ நீளமுள்ள தார் சாலை மேம்பாட்டு பணிக்கு ஏழு கோடியே 12 இலட்சம் மதிப்பீட்டில் பிரதமர் மந்திரி கிராம சாலைகள் திட்டம்-III 2023-2024 கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த தார் சாலை திட்டப் பணிகளை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி ஆகியோர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர். எலவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். நாடாளுமன்ற உறுப்பினர் பேசுகையில்: திருப்பத்தூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி ஊராட்சியில் அதிகமான செயல் திட்ட பணிகளை செய்து தந்திருக்கிறோம். மேலும் சட்டமன்ற நாடாளுமன்ற நிதியிலிருந்து சாலை பணிகள் மருத்துவ பணிகள் போக்குவரத்து, அங்கன்வாடி, கட்டிட பணி போன்ற பல்வேறு செயல் திட்ட பணிகளை எலவம்பட்டி ஊராட்சிக்கு அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊராட்சியில் அதிகமான வாக்குகளை செலுத்தி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்ததற்கு நன்றிகள், குறிப்பாக எலவம்பட்டி ஊராட்சியில் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது என குறிப்பிட்டு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் K.A.குணசேகரன், சேர்மன் திருமதி திருமுருகன், கந்திலி மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், கந்திலி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் K.S.A.மோகன்ராஜ், கந்திலி ஒன்றிய குழு துணை தலைவர் மோகன் குமார், மாவட்ட குழு உறுப்பினர் C.K.சுப்பிரமணி, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் தசரதன், வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் சீனு, கந்திலி மத்திய ஒன்றிய துணைச் செயலாளர் வழக்கறிஞர் மாது, IT WING சக்திவேல், தமிழ் குடிமகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட ஓவியர் அணி பாலா, கந்திலி மத்திய ஒன்றிய பொறுப்பாளர்கள், எலவம்பட்டி ஊராட்சி துணைத் தலைவர் ஆனந்தன், வார்டு உறுப்பினர்கள், கிளை பிரதிநிதிகள் பொதுமக்கள் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பம்பை இசை முழங்க நாதஸ்வர வாத்திய கருவிகளுடன் கோலாட்டத்துடன் வரவேற்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சி இறுதியில் அஞ்சல் துறை கோவிந்தராஜ் நன்றியுரை வழங்கினார்.