கிருஷ்ணகிரி ஆகஸ்ட் 9:
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி புகழஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகத்தில் இருந்து அமைதிப் பேரணியாக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, மகளிர் அணி, மற்றும் சார்பு அணி கழகச் செயலாளர்கள், உள்ளிட்ட அனைத்து கழக உறுப்பினர்களும் ஊர்வலமாக சென்று ராயக்கோட்டை மேம்பாலத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த புகழஞ்சலி நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த அனைத்து திமுக உறுப்பினர்களும் கலந்து கொண்டு அஞ்சலியை செலுத்தினார்கள்.