மதுரை செப்டம்பர் 8,
மதுரை மீனாட்சியம்மன் கோவில் முக்குறுணி விநாயகருக்கு 18 படி அரிசியில் கொழுக்கட்டை
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தேரசுவரர் திருக்கோவிலில் உள்ள 11 அடி உயரம் கொண்ட முக்குறுணி விநாயகருக்கு ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொழுக்கட்டை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும் அதன்படி இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவில் முக்குறுணி விநாயகருக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. மேலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அருகம்புல் மாலை, மலர் மாலைகள் சாற்றப்பட்டு விநாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து 18 படி பச்சரிசியை மாவில் வெல்லம், தேங்காய், நெய், முந்திரி, ஜாதிக்காய், கிராம்பு, ஏலக்காய், சர்க்கரை, எள் கலந்து கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டது.