பொள்ளாச்சி : டிச.31.
பொள்ளாச்சியில்
கவிஞர் கோவை ஆனந்தன் எழுதிய ரகசியமாய் ஓடும் பந்தயக் குதிரைகள் என்னும் கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா பாலக்காடு சாலையில் அமைந்துள்ள பருவானா கலையரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சத்யப்பிரியா வரவேற்புரையாற்ற
கவிஞர் .முனைவர் கிருஷ்ணா கணேஷ் தொகுப்பு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ரகசியமாய் ஓடும் பந்தயக் குதிரைகள் கவிதை தொகுப்பின் முதல் பிரதியை பட்டாம்பூச்சி குழுமம் மற்றும் பட்டாம்பூச்சி பண்பலை ஒருங்கிணைப்பாளர் கவிஞர் .பொள்ளாச்சி.முருகானந்தம் வெளியிட செல்வி அனன்யா மற்றும் கவிஞர்கள் பெற்றுக் கொண்டனர்..
நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கவிஞர் .பொள்ளாச்சி முருகானந்தம் நூலை வெளியிட்டு பேசுகையில் கவிதை என்பது ஒரு காலத்தில் மன்னர்களுக்கும் ராஜ பிரபுகளுக்கும் துதி பாடுகிற ஒரு வடிவத்தில் இருந்தது.இன்று கால பரிணாமத்தில் நீட்சி அடைந்து சாமானிய மனிதர்களிடம் வந்து சேர்ந்திருக்கிறது.
மொழியின் மீதான தாக்கம் பரவி இன்று நவீன மையத்தில் மனிதர்கள் மாறிப் போனாலும் இந்த தமிழ் கவிதைகளாய் ஒவ்வொரு சக மனிதர்களிடமும் பயணித்துக் கொண்டிருப்பது அவ்வளவு மகிழ்ச்சியான விஷயம். குறிப்பாக சாமானிய குடும்ப பெண்கள் உட்பட தனது உணர்வுகளை மொழிபெயர்க்கிற ஒரு வடிகாலாக இந்த கவிதை இருக்கிறது. இதன் பின்புலத்தில் அவர்களின் உணர்வுகளை எழுத்து வடிவமாக உருமாற்றுகிற செயலுக்கு மிக முக்கியமாக சமூக வலைத்தளங்கள் மிகுந்த உபயோகமாய் இருக்கிறது என்பதில் மாற்று கருத்து இல்லை …
இப்படியான சூழலில் ஒரு கவிதை இப்படித்தான் இருக்க வேண்டும் இப்படித்தான் எழுத வேண்டும் என்ற வரைமுறையை புதிதாக எழுதுபவர்கள் மீது திணிக்க கூடாது.
விமர்சனங்கள் தேவை தான் ஆனால் புதிதாக எழுதுபவர்கள் மீது இப்படியான விமர்சனங்களை வைக்கக் கூடாது அவர்கள் சுதந்திரமாய் எழுதட்டும்.
எழுத எழுத ஒவ்வொரு சாமானியர்களும் ஆகச்சிறந்த படைப்பாளிகளாக நிச்சயமாக உரு மாறுவார்கள்.அதற்கு ஏராளமான முன் உதாரணம் நம்மிடையே இருக்கிறது.
இன்று ஒவ்வொரு துறையிலும் சாமானியர்கள் நசுக்கப்படுகிறார்கள்.அப்படித்தான் இந்த படைப்புலகிலும்..
சக மனிதர்களை சக படைப்பாளர்களை பாராட்ட பழக வேண்டும் ஆர்வத்தோடு எழுத முன் வருகிற இளம் படைப்பாளர்களை ஊக்குவிக்க வேண்டும்.
தமிழ் வாழ்க என்று கோஷம் விடுவதை காட்டிலும் இந்த மொழியை கடத்துகிற இளம் படைப்பாளர்களை நிச்சயம் ஊக்குவிக்க வேண்டும் .அப்போதுதான் நாம் முன்னெடுத்து இருக்கும் தமிழ் அடுத்த தலைமுறைக்கு பரவும் என பல்வேறு கருத்துகளை பேசினார்.
இந்த நிகழ்ச்சியில்
தமிழ் இலக்கிய பாசறை பொதுச் செயலாளர் முனைவர் கோவை கிருஷ்ணா,
ஆண்டாள் அறக்கட்டளை தலைவர்.நகரமன்ற உறுப்பினர் எம் .கே .சாந்தலிங்கம்,பொள்ளாச்சி இலக்கிய வட்ட செயலாளர் கவிஞர் இரா. பூபாலன்,கோவை வெண்ணிலா மன்ற தலைவர் கவிஞர். கவியகம், மணிவண்ணன்
வாகை பதிப்பகம் மற்றும் வாசகர் வட்ட தலைவர் கவிஞர் .துரைசாமி,
தீ இனிது இலக்கிய இயக்க ஒருங்கிணைப்பாளர் கவிஞர்.சோழநிலா
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நூலை தேசிய மக்கள் உரிமைகள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் கவிஞர் டாக்டர் கோவை சசிகுமார் மற்றும்
பட்டாம்பூச்சி பண்பலை வர்ணனையாளர் கவிஞர்.ஹிதாயத் ஆகியோர் சிறப்பாக அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினர்..
இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி கம்பன் கலை மன்ற தலைவர் கே.எம் சண்முகம்,பொள்ளாச்சி தமிழிசைச் சங்க துணைச் செயலாளர் முரளி கிருஷ்ணன்,பத்திரிக்கையாளர் ஜீவா,நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ்,மற்றும் கவிஞர்கள் எழுத்தாளர்கள் பொள்ளாச்சி அபி.சுடர்விழி சோலைமாயவன்,கவிஞர் செந்திரு,எழுத்தாளர் கவிஞர் முகில் நிலா, தமிழ்.கவிஞர். ரஹ்மத்துல்லா,ரகுபதி.உள்ளிட்ட ஏராளமான கவிஞர்களும் இலக்கிய ஆர்வலர்களும் திரளாக கலந்து கொண்டனர்.