தஞ்சாவூர், நவ. 9.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக த்தில் நீர்நிலை தெய்வங்களும் சமூக மரபுகளும் என்ற நூல் வெளியிடப்பட்டது.
தமிழ் பண்பாட்டு மரபுகளை ஆய்வு செய்வதற்காக தமிழ் பல்கலைக்கழகத்திற்கு தமிழ்நாடு அரசு ரூபாய் 2.11 லட்சம் ஒதுக்கீடு செய்தது .இத்திட்டத்தின் ஒரு பகுதியாக தென் தமிழ்நாட்டில் உள்ள குளங்கள், ஏரிகள், கண்மாய்களின் கரைகளில் குடிகொண்டுள்ள நீர்நிலை தெய்வங்கள் குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டன
நீர் நிலைகளுடன் இருக்கக்கூடிய வளங்களுக்கும், பயிர்களுக்கும், மடைகளுக்கும் கரையோரங்களில் இருக்கக்கூடிய மரங்களுக்கும் இடையே பல சமூக தொடர்புகள் நுணுக்கமாக உள்ளன. நீர் நிலை களில், கரைகளில் இருக்கக்கூடிய தெய்வங்கள் கரையை பாதுகாப்ப துடன் மனிதர்களை பாதுகாக்கின் றன. இந்த தரவுகளை எல்லாம் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கிய பள்ளியின் இணை பேராசிரியர் முனைவர் இரா வெங்கடேசன் கள ஆய்வின் வழியாக சேகரித்து எழுதிய” நீர் நிலை தெய்வங்களும் சமூக மரபுகளும் “என்ற நூலை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் வெளியிட அதை பதிவாளர் (பொ) இளையாப்
பிள்ளை பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்