நாகர்கோவில் அக் 19
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டிற்கு இரண்டு பருவ நெல் சாகுபடி முறைகள் உள்ளன . இதில் முதல் பருவ சாகுபடி ஜூன் மாதமும் 2 ம் பருவ சாகுபடி அக்டோபர் மாதமும் நடைபெறுவது வழக்கம் இந்த இரண்டு பருவ நெல் சாகுபடிகளுக்கும் பேச்சிப்பாறை அனையிலிருக்கு கால்வாய்கள் வழியாக விவசாயத்திற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் விநியோகம் செய்வது வழக்கம் . தற்போது இரண்டாம் பருவ கும்பப்பூ நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் வயல்களில் விதை நெல் விதைத்து அது முளைக்கும் தருவாயில் உள்ளது ஆனால் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி தோவாளை கால்வாயில் தண்ணீரை அதிகாரிகள் நிறுத்தி விட்டனர். இதனால் விதைத்த விதை நெல்கள் முனைக்காத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் மனமுடைந்த தோவாளை கால்வாய் விவசாய்கள் விதை நெல்லுடன் வந்து நாகர்கோவில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது . கடலில் தண்ணீர் வீனாக கலக்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளும், அரசும் விவசாயத்திற்கு தண்ணீர் தராமல் விவசாயிகள் வயிற்றில் அடிப்பதாக கூறி வேதனை.