தென்காசி ஏப் 13 தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் சட்ட விதிகளுக்கு புறம்பாக முன் அனுமதி என்ற பெயரில் திட்டப் பணிகள் மேற்கொண்ட விவகாரம் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகங்களில் கவனத்திற்குச் செல்லவே முன் அனுமதி கோப்புகள் விவகாரத்திற்கு முட்டுக்கட்டை கொடுத்து சுற்றறிக்கை அனுப்பி உள்ள நடவடிக்கை விவகாரம் தென்காசி மாவட்டம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டத்தின் பெரிய நகர சபைகளில் கடையநல்லூர் நகராட்சியும் ஒன்று சுமார் ஒன்றரை லட்சம் பொதுமக்களும் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் உள்ள இந்த நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது பெருகி வரும் ஜனத்தொகை க்கேற்ப அரசு தடை செய்யப்பட்ட நஞ்சை,புஞ்சை நிலங்களில் எல்லாம் குடியிருப்பு வாசிகளுக்கு குறிப்பாக தன் நண்பர்களோடு நகர மன்ற தலைவர் பயணிக்கும் ரியல் எஸ்டேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக அரசின் அனுமதி பெறாமல் நகரம் விரிவாக்கம் ஆகிக் கொண்டிருக்க கடையநல்லூர் நகராட்சி நிர்வகிக்கும் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் எவ்வித முன் அனுமதியுமின்றி தான் தோன்றி தனமாக குடியிருப்பு இருந்தும் மக்கள் வசிக்காத இடங்களிலும் புதிதாக வீதிகள், கழிவு நீர் ஓடைகள் என பல்வேறு அடிப்படை கட்டமைப்புகளை அந்த அங்கீகரிக்கப்படாத மனை பிரிவுகளுக்கு வசதி ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமனம் செய்வதிலிருந்து அதற்கு சம்பளம் வழங்குவதிலிருந்தும் அவசரகால திட்டப் பணிகளுக்காகவும், ஆகும் செலவு தொகையை முன் அனுமதி என்ற பெயரில் அரசிடம் எவ்வித ஒப்புதலும் வாங்காமல் சட்ட விதிகளுக்கு புறம்பாக விதிகளில் முன் அனுமதி என்ற சொல்லே இல்லாத நிலையில் அந்த வார்த்தையை பயன்படுத்தி ஆட்சியாளர்களும் நகராட்சி அதிகாரிகளும் கூட்டுச்சதி செய்து மக்களின் வரிப்பணத்தை முறைகேடு செய்து சூறையாடி உள்ளனர் மேலும் திட்டப் பணிகளுக்கான பொருள்களை கொள்முதல் செய்ததிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில் கடையநல்லூர் சமூக சேவகர் சௌமேஷ்யாதவ் தமிழ்நாடு முதலமைச்சரின் தனி பிரிவிற்கு இது குறித்து ஒரு புகார் மனுவை அனுப்பி உள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது : தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் அரசு விதிமுறைகளை மீறி முறைகேடாக முன் அனுமதி என்ற பெயரில் நகராட்சி பணிகள் மற்றும் கொள்முதல்களை மேற்கொண்ட நகரமன்ற தலைவர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முன் அனுமதி மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார் மேலும் நகராட்சிகளின் பொது நிதியிலிருந்து பணிகள் மேற்கொள்ள அனுமதி வேண்டி பெறப்படும் முன்மொழிவுகளில் பெரும்பாலானதை நகரமன்ற தலைவரின் முன் அனுமதி பெற்று அனுப்பி வைக்கப்படுகிறது பெரிய முன்மொழிவுகளை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர்களால் பரிந்துரை செய்து தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் திருத்தம் சட்டம் 2022 பிரிவு 40 மற்றும் 52 நகர மன்றத்திற்குரிய அதிகாரம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது நகர மன்ற தலைவர் முன்ன அனுமதி பெற்று பணிகள் மேற்கொள்ள வழிவகைகள் ஏதும் செய்யப்படவில்லை இந்த நிலையில் இவ்வாறான முன்மொழிவுகள் தொடர்ச்சியாக கடையநல்லூர் நகராட்சியில் இருந்து நகராட்சி நிர்வாக ஆணையருக்கு கோப்புகள் பெறப்பட்டு வருகிறது தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதிகள் 2023 அத்தியாயம் iv பகுதி 1, பிரிவு 154 முதல் 170 வரையிலான விதிகளில் நகர மன்றம் தொடர்பாக சாதாரண மற்றும் சிறப்பு கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றும் நடைமுறைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது சாதாரண கூட்டம் குறைந்தது மாதத்திற்கு ஒருமுறையேனும் தலைவரால் கூட்டப்பட வேண்டும் மன்றம் அல்லது நிலை குழு கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலை ஆணையாளர் தலைவருடன் கலந்தாலோசித்துy தயாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது கூட்டம் நடத்தி முன் அனுமதி பெற்ற பின்னரே எந்தவித பணிகளையும் தொடங்க வேண்டும் என விதிகளில் கூறப்பட்டுள்ளது அதன்படி கடையநல்லூர் நகராட்சி நிர்வாகம் தமிழக அரசின் நகராட்சிகள் சட்டத்தையும் விதிகளையும் மதிக்காமல் மக்கள் வரிப்பணத்தை பாழாக்கி உள்ளது என தெரிவித்துள்ளது. முன் அனுமதி என்ற பெயரில் நடந்த பல்வேறு பணிகளில் ஊழல் நடந்திருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது எனவே முன் அனுமதி என்ற சொல் அரசின் சட்டத்திலும் விதிகளிலும் இல்லாத நிலையில் மேற்கொண்டுள்ள பணிகளை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட ஆட்சியாளர்கள் மீதும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்து அவருடைய சொந்த பணத்தில் மேற்கண்ட முறைகேடு தொகைகளை வசூல் செய்ய உத்தரவிட வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் அவர் தெரிவித்துதுள்ளார்
ஊழல் நடந்திருக்கலாம் பொதுநல அமைப்பு புகார்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics