கன்னியாகுமரி ஜன 30
திமுக பேரூராட்சி தலைவரை கண்டித்து திமுக கவுன்சிலர் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி பேரூராட்சி 10ம் வார்டில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் பாரபட்சம் காட்டுவதாக கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவரை கண்டித்து 10 வார்டு திமுக கவுன்சிலர் இக்பால் தலைமையில் கன்னியாகுமரி தெற்குகுண்டல் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்பாட்டத்துக்கு 10ஆவது வார்டு கவுன்சிலர் இக்பால் தலைமை வகித்தார். இப்போராட்டத்தில், 10ஆவது வார்டுக்குள்பட்ட பகுதிகளில் 10 நாள்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வழங்கப்படுவதாகவும், தெற்கு குண்டல் பகுதியில் அமைந்துள்ள மழைநீர் வடிகால் ஓடையை சீரமைக்க பேரூராட்சி தலைவர் மற்றும் நிர்வாகத்தை வலியுறுத்தியும் பொதுமக்கள் கோஷம் எழுப்பினர்.