கம்பம்.
ஆங்கூர் ராவுத்தர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி விசயத்தில் முழு பெயர் பதிவு செய்ய மூன்று ஆண்டுகள் தொடர் கோரிக்கை வைத்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு பொது மக்கள் பாராட்டு.
தேனி மாவட்டம் கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி என்பது 1960 ம் ஆண்டு ஆங்கூர் ராவுத்தர் என்பவரால் பள்ளி துவங்க இடம் தானமாக வழங்கப்பட்டது.
சில தலைமை ஆசிரியர்கள் அலட்சியம் காரணமாக ஆங்கூர் ராவுத்தர் என்பது பள்ளி சுற்று பகுதியில் ஆவணங்களில் நுழைவு வாயிலில் என ஆ.ரா என சுருக்கமாக போடப்பட்டது.
இது குறித்து 2021 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2024 நவம்பர் மாதம் வரை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாநில செயலாளர் யாசர் அராபத் தேனி மாவட்டம் நிர்வாகிகள் கம்பம் நகர நிர்வாகிகள் தொடர்ந்து பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ் செல்வன் எம்பி சட்ட மன்ற உறுப்பினர் இராமகிருஷ்ணன் எம்எல்ஏ நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் பள்ளி கல்வி துறை அதிகாரிகள் என பல்வேறு மனுக்கள் அளித்து எடுத்த நடவடிக்கைகள் காரணமாக.
பள்ளி சுற்று பகுதியில் மற்றும் ஆவணங்கள் நுழைவு வாயிலில் என தற்போது ஆங்கூர் ராவுத்தர் பெண்கள் மேல் நிலைப்பள்ளி என முழு பெயர் பதிவு செய்ய பட்டுள்ளது.
இன்னும் சான்றிதழில் மட்டும் பெயர் முழுவதும் பதிவு செய்யப்படாமல் இருக்கிறது.
மூன்று ஆண்டுகளாக ஆங்கூர் ராவுத்தர் பெண்கள் மேல் நிலைப்பள்ளி குறித்து தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரலாறு பெயரை பதிவு செய்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு பொது மக்கள் மற்றும் ஆங்கூர் ராவுத்தர் பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.