கோவை ஏப்:08
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் அவர்களிடம் காரமடை மங்களக்கரைப் புதூர் ரோடு எத்தப்பன் நகர் அருகிலுள்ள அம்பேத்கர் நகரில் முறைகேடாக அரசு ஆதிதிராவிடர் நலத்துறை இடத்தை அத்துமீறு நுழைந்து குடிசை அமைத்து ஆக்கிரமிப்பு செய்து உள்ளவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி காரமடை பகுதியைச் சேர்ந்த துரைசாமி, வி.ஆர்.பத்திரசாமி ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியாளரிடம் ஆட்சேபனை புகார் மனு அளித்தனர்.
காரமடை பகுதியை உள்ளடக்கியுள்ள உண்மையாக இடம்,வீடு இல்லாத அருந்ததியர் சமுதாய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டுமென கோரிக்கை மனு வழங்கினார்கள்.