கோவை பிப்:08
பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றிய கிட்டசூராம்பாளைம் ஊராட்சியை நகராட்சி நிர்வாகத்துடன் இணைப்பதற்கு பொதுமக்கள் சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது பற்றி பொதுமக்கள் கூறியதாவது: கிட்டசூராம்பாளையம் ஊராட்சியானது சிறு கிராமமாகவே இருந்து வருகிறது. பெரும்பாலான மக்கள் விவசாய கூலியாகவும், 100 நாள் வேலை திட்ட பயனாளியாகவும் இருந்து வருகின்றனர். பொள்ளாச்சி நகராட்சியுடன் இணைக்கும் பட்சத்தில் பொதுமக்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும் எனவும் கடந்த 2/10/24 மற்றும் 26/1/25 ஆகிய நாட்களில் ஊராட்சி கிராம சபை நடைபெற்றதில் நகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஊராட்சியாக தொடர்ந்தால் மட்டுமே எங்கள் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்கும் மேலும் தற்போது ஊராட்சியில் குறைவான வரியினங்கள் செலுத்தி வருகிறோம், நகராட்சிக்கு சேர்ந்தால் வரியினங்கள் அதிகமாகும் கிராம ஊராட்சியாக தொடர்ந்தால் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் எனவே கிட்ட சூராம்பாளையம் ஊராட்சியின் பொதுமக்கள் நலன் கருதி பொள்ளாச்சி நகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.