ஈரோடு நவ 11
ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதி திமுக சார்பில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஈரோடு அசோகபுரம் நெரிக்கல் மேடு பகுதியில் மாநகர செயலாளர் சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது வீரப்பன் சத்திரம் பகுதி செயலாளர் வி.சி. நட ராஜன் வரவேற்றார் மேயர் நாகரத்தினம் மண்டல தலைவர் பி கே பழனிச்சாமி 14 வார்டு கவுன்சிலர் புனிதா சக்திவேல் ஆகியோர் முன்னிலை வைத்தனர் இதில் தலைமைக்கழக பேச்சாளர் வியானி விஸ்வா கலந்து கொண்டு திமுக அரசின் சாதனைகளை விளக்கி பேசினார் இந்த கூட்டத்தில் பிரகாஷ் எம் பி துணை மேயர் செல்வராஜ் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம் தலைமை கழக பேச்சாளர் இளைய கோபால் மாவட்ட துணை அமைப்பாளர்கள் சின்னையன் செல்லப் பொன்னி மனோகரன் நிர்வாகிகள் சீனிவாசன் பெரியார் நகர் பகுதி திமுக செயலாளர் அக்னி சந்துரு கவுன்சிலர் மல்லிகா நடராஜன் முன்னாள் கவுன்சிலர் காவேரி செல்வம் மற்றும் வீரப்பன் சத்திரம் பகுதி நிர்வாகிகள் மகளிர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை வீரப்பன் சத்திரம் பகுதி தி மு க செயலாளர் வி சி நடராஜன் செய்திருந்தார்.