தென்காசி வடக்கு மாவட்டம் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் குருக்கள்பட்டியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமையில் நடைபெற்றது
கழக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் கூட்டம் தென்காசி வடக்கு மாவட்டம் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் குருக்கள்பட்டி விநாயகர் திடலில் மாவட்ட கழக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமையில் மாவட்ட கழக துணை செயலாளர்கள் பொய்கை மாரியப்பன், சகுந்தலா, பொருளாளர் சண்முகையா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டம் ஏற்பாடு செய்திருந்த கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வராஜ் வரவேற்புரையாற்றினார். மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வேல்முருகன் தொகுப்புரையாற்றினார் கழக அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன், கழக மகளிரணி துணை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜலெட்சுமி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் சுப்பையா பாண்டியன், துணை செயலாளர் கண்ணன் என்ற ராஜீ, திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முனைவர் சிவ ஆனந்த் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் கிருஷ்ணன் என்ற கிட்டுராஜா, ராமசாமி என்ற ரவி, சந்திரன் பாலசுப்பிரமணியன் வழக்கறிஞர் சுப்பிரமணியன் ,வாவை ஜாஹீர் உசேன், பரமகுருநாதன், மகாதேவன், டாக்டர் திலீபன் ஜெய்சங்கர், குட்டி மாரியப்பன், குருசேவ், செந்தில்குமார் ,மதன் ,சங்கர சுப்பிரமணியன், தீக்கனல் லெட்சுமணன், ஒன்றிய கழக செயலாளர்கள் இளசை தேவராஜ், ரவிச்சந்திரன் ,முத்துப்பாண்டியன், ராமதுரை, செல்வராஜ், மகாராஜன், ரமேஷ் ,பொன் முத்துவேல் சாமி, பெரியதுரை, ஜெயகுமார் ,டாக்டர் சுசீகரன் ,ராமச்சந்திரன், நகர கழக செயலாளர்கள் ஆறுமுகம், முருகன், கணேசன் ,பேரூர் கழக செயலாளர்கள் சுதாகர் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்