ராமநாதபுரம், மார்ச் 6-
ராமநாதபுரத்தில் திமுக இளைஞர் அணி சார்பில் இந்தி திணிப்பு நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறு சீரமைப்பில் அநீதி விளைவிக்கும் மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் அரண்மனையில் நடந்த இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சம்பத் ராஜா வரவேற்புரை ஆற்றினார். இளைஞர் அணி மாநிலத் துணைச் செயலாளர்கள் ராஜா, இன்பா ரகு, ராமநாதபுரம் நகராட்சி சேர்மன் ராமநாதபுரம் வடக்கு நகர் செயலாளர் கார்மேகம், நகராட்சி துணை சேர்மன் தெற்கு நகர் செயலாளர் பிரவீன் தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் ராஜகண்ணப்பன் சிறப்புரை ஆற்றினார். தலைமைக் கழகப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கண்டன உரை ஆற்றினார். ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர் இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரமேஷ் கண்ணா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன், கழக இளம் பேச்சாளர் காயத்ரி, தலைமைக் கழக செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி, மாவட்ட துணைச் செயலாளர் ஆதித்தன், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நகராட்சி கவுன்சிலர் ரமேஷ் கண்ணா நன்றி கூறினார்.