தஞ்சாவூரில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்!
557 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்!!
தஞ்சாவூர் ஜூலை 2
தஞ்சாவூர் மாவட்டஆட்சியர் அலுவ லகம் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது..
கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 557 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினார் கள்.
மனுக்கள் மீது உரிய நடவடிக்கை கள்உடனடியாக மேற்கொள்ளுமா று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தர விட்டார்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரத்தநாட்டை ச் சேர்ந்த கோவிந்தராஜ் அவர்களு க்கு செயற்கை காலும்,சத்துணவு திட்டத்தின் கீழ் கருணை அடிப்படை யில் ரேவதி என்பவருக்கு சமையல் உதவியாளர் பணி நியமன ஆணை யையும் மாவட்ட ஆட்சியர் வழங்கி னார்.
அதனைத் தொடர்ந்து மத்திய பிரதேசம் இந்தூர் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான பளுதூக்குதல் விளையாட்டுப் போட்டியில் தஞ்சாவூர் மாவட்ட கேலோ இந்தியா மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பதக்கத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், உதவி ஆட்சியர் பயிற்சி உத்கர்ஷ் குமார், தாட்கோ மாவட்ட மேலாளர் ரெங்கராஜன், தனித்துணை ஆட்சி யர் ( சமூக பாதுகாப்பு திட்டம்) சங்கர் ,மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்க ள் கலந்து கொண்டனர்.