தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வடக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையிலும் ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. முகாமில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை மேயர் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.
பின்னர் மேயர் பேசியதாவது “தூத்துக்குடி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் இதுவரை நடந்த பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 3052 மனுக்கள் பெறப்பட்டது 2500 மனுக்களுக்கு இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளது. மற்ற மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. தூத்துக்குடியில் 206 பூங்காக்கள் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பூங்காக்களில் கூடைப்பந்து, கைப்பந்து போன்ற விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதன்படி மாநகராட்சி மேற்கு மற்றும் தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 14 பூங்காக்களில் விளையாட்டு மைதானம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் 4000 சாலைகள் உள்ளன. இதில் 2500 சாலைகள் புதிதாக போடப்பட்டுள்ளது. மீதமுள்ள சாலைப் பணிகள் ஜனவரியில் தொடங்கும். வருகிற மார்ச் மாதத்துக்குள் அனைத்து சாலைகளும் புதிதாக போடப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் சுரேஷ்குமார், மாநகர அலுவலர் டாக்டர் வினோத் குமார், ரங்கநாதன், துணை மாநகர பொறியாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் ராஜசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் கற்பகனி, பட்டுக்கனி, ஜெயசீலி, நாகேஸ்வரி, அந்தோணி, மார்க்கஸ், ரங்கசாமி, தேவேந்திரன், கீதா முருகேசன், பவானி, ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் ஜேஸ்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.