கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பெரிய கவுண்டானூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
அந்த கிராமத்தில் யாரேனும் இறந்துவிட்டால் தகணம் செய்வதற்க்கு என 80 சென்டில் சுடுகாடு உள்ளது. ஆனால் தற்போது
அப்பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவர் சுடுகாட்டை முழுவதும் ஆக்கிரமித்து அதனை உழுது பயிர் செய்துள்ளார் .
இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் கொடுத்தனர்.புகாரின் அடிப்படையில்
வட்டாட்ச்சியர் , உத்தரவின் பேரில் துணைவட்டாசியர் கிராம நிர்வாக அலுவலர் ஜெயந்தி நில அளவியர் கோமதி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் மத்தியில் ஆக்கிரமிப்பை அகற்ற அளவு மேற்கொண்டனர்.
அப்போது ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்கள் அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊர் பொதுமக்களை தகாத வார்த்தையால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அனைவரும் கலைந்து சென்றனர் சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் மாவட்ட நிர்வாகம் நேரடி ஆய்வு செய்து காவல்துறை உதவியுடன் சுடுகாட்டு ஆக்கிரமிப்பை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டவர் வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.