கம்பம்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரிந்த விலாசம் தெரியாத மனநலம் பாதித்த மாரியம்மாள் என்பவர் சுற்றித் திரிகிறார். இதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு மனநல பாதித்த ஒரு மூதாட்டி சாலையை கடக்க முயன்ற பொழுது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்தில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதன் காரணமாக ஒரு உயிரை காப்பாற்றும் பொருட்டு துறை சார்ந்த அதிகாரிகள் இந்த மனநலம் பாதித்த பெண்ணை காப்பகத்தில் சேர்க்க வேண்டுமென அப்பகுதியில் உள்ள பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், துறை சார்ந்த அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.