தர்மபுரியில் குடிநீர் வேண்டி சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்கள்
குடிநீர் வழங்க வலியுறுத்தி கேட்ட பெண்களை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் அள்ளி வீசிய டேங்க் ஆப்ரேட்டர். தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கே.வேட்ரப்பட்டி கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராம மக்களுக்கு பஞ்சாயத்து நிர்வாகம் முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இது குறித்து பலமுறை பஞ்சாயத்து தலைவர் டேங்க் ஆபரேட்டர் உள்ளிட்டோரிடம் முறையிட்டனர். ஆனால் பெண்களிடம் டேங்க் ஆபரேட்டர் ஒரு சில அருவருக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்தி இழிவாக பேசி உள்ளார் என கூறப்படுகிறது. இதனை கண்டிக்கும் வகையில் தங்கள் கிராம மக்களுக்கு குடிநீர் உடனடியாக வழங்க வேண்டும் எனவும் டேங்க் ஆபரேட்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அரூரில் இருந்து திருப்பத்தூர் சென்னை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலைகள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையின் நடுவே கற்களும் வைக்கப்பட்டன. இது குறித்த தகவல் அறிந்து வந்த அரூர் காவல்துறையினர் மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி பின்பு தண்ணீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க உத்தரவாதம் கொடுத்ததால் இந்த சாலை மறியல் கைவிடப்பட்டன. சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது