கன்னியாகுமரி மகாதானபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பி.டி.செல்வகுமார் பரிசு வழங்கினார்.
மகாதானபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் சுயம்பு கனி தலைமை தாங்கினார், பள்ளி ஆசிரியை கீதா வரவேற்று பேசினார், இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு கலப்பை மக்கள் இயக்கம் நிறுவனத் தலைவர் பி.டி. செல்வகுமார் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் பேராசிரியர் ராம்குமார், திமுக ஒன்றிய துணைச் செயலாளர் பாலசுப்ரமணியன், குமரி மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், பேராசிரியர் டாக்டர் ரங்கநாயகி, ஒன்றிய அமைப்பாளர் ஏசுதாசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கணபதி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.