திருப்பத்தூர்:நவ:12, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் சனாவுல்லா மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் கடந்த நவம்பர் 7ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளரும் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் எச்.ராஜா அமரன் திரைப்படம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவும் விசிக நிறுவன தலைவர் திருமாவளவனும் பச்சை தேச துரோகிகள் என்று கூறியதும் மேலும் சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் தவறான தகவல்களை பரப்பி சிறுபான்மை சமூகங்களின் தலைவர் மற்றும் அந்த மக்களின் மீது ஏற்றுக் கொள்ள முடியாத பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை தூண்டி வருகிறார்.
மேலும் திமுக கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் மீதும் அவதூறு பரப்பும் வகையிலும் எச் ராஜா பேசி வருகிறார். எனவே திமுக அரசு எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார் தொடர்ந்து இதுபோல் அவதூறுகளையும் போய் குற்றச்சாட்டுகளை குற்றச்சாட்டுகளையும் பேசி வரும் எச்.ராஜா மென்டல் ஆகிவிட்டார் எனவே மெண்டல் ஹாஸ்பிடலில் சேர்த்து அவருக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக திருப்பத்தூரில் எச். ராஜாவை மெண்டல் ஹாஸ்பிடலில் சேர்க்க வேண்டும் என மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சனாவுல்லா பேட்டி அளிக்கையில் : திமுக அரசின் கூட்டணி கட்சிகளான மனித மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் அவர்களையும் தேச துரோகிகள் என்று விமர்சித்த எச்.ராஜா மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பேட்டி அளித்தார்.