தென்காசி. டிச.3
செங்கோட்டை சுதந்திர போராட்ட வீரர்வாஞ்சிநாதன் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து 2023-2024 கல்வி ஆண்டில் 8வகுப்பில் முதல்,இரண்டு,மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் முன்னாள் பணிநிறைவு பெற்ற ஆசிரியா் கல்யாணசுந்தரம் நினைவு நாளை முன்னிட்டு அவரது மகன் பால்ராஜ் மற்றும் குடும்பத்தார் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமைஆசிரியா் சேவியா்அலெக்சாண்டிரிய தலைமைதாங்கினார். பணிநிறைவு கல்வித்துறை நிதிகாப்பாளர் பால்ராஜ் முன்னிலைவகித்தார். பள்ளி ஆசிரியா் இராதா அனைவரையும் வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து 8வகுப்பில் முதலிடம் மாணவிக்கு கல்வி ஊக்கத்தொகை ரூபாய் 5,000, இரண்டாம் இடம் பிடித்த மாணவி ரூபாய் 3000, மூன்றாம் இடம் பிடித்த மாணவன் ரூபாய் 2000 ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை பால்ராஜ் வழங்கி வாழ்த்தினார். நிகழச்ச்யில் ஓய்வ பெற்ற அரசு அலுவலா்கள் சங்க மாவட்ட செயலாளா் இளஞ்செழியன், செங்கோட்டை கிளைத்தலைவா் கருப்பசாமி, துணைத்தலைவா் மாடசாமிசெட்டியார், பொருளாளா் சுப்பிரமணி, விவசாயத்துறை அலுவலா் இராஜேந்திரகணேசன், முன்னாள் பள்ளி மாணவரும் பணிநிறைவு பெற்ற பட்டதாரி ஆசிரியா் இராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவியா், பெற்றோர் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் பள்ளி ஆசிரியா் சுப்புலெட்சுமி நன்றி கூறினார்.