ராமநாதபுரம், ஏப்.24-
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு முதல்வர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாதாந்திர ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் சகாய தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கணேசன், கோரிக்கையை விலக்கிப் பேசினார். மாநிலச் செயலாளர் சோமசுந்தர், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் மாவட்ட நிர்வாக ஆலோசகர் அன்பிராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் விஜயராணி உட்பட பலர் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினர் மாவட்ட பொருளாளர் மார்த்தாண்டன் நன்றி கூறினார்.