சத்துணவு ஊழியர் சங்கம் முடிவு .
சிவகங்கை:ஏப்:14
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது .
அமைப்பின் மாநில துணைத்தலைவர் மிக்கேல்லம்மாள் தலைமை தாங்கினார் . மாநில பொதுச் செயலாளர் நூர்ஜகான் வேலை அறிக்கையையும் , மாநில பொருளாளர் சுப்புக்காளை வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது . நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தேர்தல் கால வாக்குறுதியான காலமுறை ஊதியம் , குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில் அனுமதிக்கப்பட்டு ஏற்பட்டுள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் . இவை நிறைவேறாத பட்சத்தில் தமிழக அரசின் கவனத்தை ஈர்த்திட ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் .
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் சிறப்புக் காலமுறை ஊதியம் பெறுகின்ற வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்கக்கூடிய குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூபாய் 6750 ஐ சத்துணவு ஊழியர்களுக்கும் வழங்க கோரி எதிர்வரும் 24. 04 .2025 அன்று சென்னையில் சமூக நல இயக்ககம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த வேண்டும் . ஆகிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது . கூட்டத்தில் மாநில துணைத்தலைவர்கள் கிருபாவதி, தனலட்சுமி , மாநிலச் செயலாளர் கமலக்கண்ணி , தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட தலைவர் குமரேசன் , செயலாளர் முத்துக்குமார் , பொருளாளர் தென்றல் , அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்வகுமார் , மாவட்டச் செயலாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் .