திண்டுக்கல் மே :30
திண்டுக்கல்லில் வழக்கறிரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளரை கண்டித்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் வழக்கறிஞர்களும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
இதுகுறித்து வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில் , கடந்த சில தினங்களுக்கு முன்பாக வடமதுரை சித்துவார்பட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் தனது வீட்டிற்கு செல்லும் வழியில் அனுமதி இல்லாத பார் முன்பு செல்லும் போது விபத்து ஏற்பட்டு அவர் கார் கவிழ்ந்தது. அதையும் பாராமல் அங்கு மது குடித்துக் கொண்டிருந்த 10 பேர் சேர்ந்து வழக்கறிஞர் விஜயகுமாரை கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதில் வேடசந்தூர் டிஎஸ்பி துர்கா தேவி, சுள்ளான் என்னும் ஒருவர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்துள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத டிஎஸ்பி துர்கா தேவி இடைக்கால பணிநீக்கம் செய்ய வலியுறுத்தியும், மேலும் வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மேலும் வழக்கறிஞர் விஜயகுமார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும் இந்த ஒரு நாள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.