ராமநாதபுரம், டிச.5-
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி பேருந்து நிலையம் முன்பு சத்திரக்குடி சுற்றுவட்டார ஐயப்ப பக்தர்கள் இணைந்து கானா பாடகி இசைவாணி ஐயப்ப பாடலை இழிவுபடுத்தி பாடியதை கண்டித்து அவரை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் நீலம் பவுண்டேஷன் மையத்தை தடை செய்ய வேண்டும் என்று நெடிய மாணிக்கம் மணிகண்ட பூசாரி தலைமையில் கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி மற்றும் விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் சரவணன் ஆகியோர் கண்டன கோஷங்களுடன் கண்டன உரைகளை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த போகலூர் ஒன்றிய தலைவர் வெங்கடேஷ் மற்றும் போகலூர் ஒன்றிய பொதுச்செயலாளர் முத்துவேல் பாண்டியன், ஒன்றிய பொறுப்பாளர் மாதவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும், ஐயப்ப பக்தர்களும் திரளாக கலந்துகொண்டு கொண்டனர்.