ராமநாதபுரம், பிப்.26-
ராமநாதபுரத்தில் விஸ்வ ஜனசக்தி தொழிற்சங்க பேரவை சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் விஸ்வ ஜனசக்தி தொழிற்சங்க பேரவை சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்து விஸ்வகர்மா மக்கள் உணர்வுடன் விஸ்வ கர்மா சமுதாய மக்களுக்கு கல்வி அரசு வேலைவாய்ப்பில் 5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கிட கோரியும், தமிழகத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் விஸ்வகர்மா மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கும் போது காப்பாளர், கொல்லர், தச்சர், கண்ணார், சிற்பி, தட்டார் உள்ளடக்கிய இந்து-விஸ்வகர்மா என்று சான்றிதழ் வழங்க வேண்டும், விஸ்வகர்மா ஜெனன தினமான செப்டம்பர் 17ஆம் தேதியை விஸ்வகர்மா ஜெயந்தி பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் போன்ற 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென் கிழக்கு மண்டல செயலாளர் முனியசாமி விஸ்வகர்மா ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து கண்டன உரை ஆற்றினார். பேரவை பொதுச் செயலாளர் மகேஸ்வரன் விஸ்வகர்மா ஆர்ப்பாட்ட முழக்கு உரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் ஜெயபாலகன், மாவட்டச் செயலாளர் திலீப் குமார், மாவட்ட பொருளாளர் சரவணன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.