வேலூர் 09
வேலூர் மாவட்டம் ,காட்பாடி வட்டம், விருதம்பட்டு பேருந்து நிலையம் அருகில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது மற்றும் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நவீன் தலைமையில் நடைபெற்றது..
மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் தாஹிரா பானு, தமிழக வெற்றி கழகத்தினர்
பகுதி செயலாளர் பிரவீன்குமார், மற்றும் சத்தியராஜ், சாரகன், வி.வி.மகேஷ், கார்த்திக், பிரபு, லேகேஷ், வெங்கடேஷ், சிலம்பரசன், வினோத், பாண்டு (எ) குணசேகரன், ஆகியோர் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்
உடன் மகளிர் அணியினர்கள்
மற்றும் தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.