கோவை டிச:21
பாராளுமன்றத்தில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் மீது அவதூறு கருத்துக்களை பேசிய பாஜக உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வலியுறுத்தி கோவை தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை- நீலமலை மண்டல துணை செயலாளர் களப்போராளி ச. பிரபு அவர்களின் தலைமையில் திரளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை காவல்துறை கைது செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி நகர செயலாளர் மு.சங்கர், வடகிழக்கு ஒன்றிய செயலாளர் ப.ரவிக்குமார்,
வடமேற்கு ஒன்றிய செயலாளர் ம.செல்வன், ஆனைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் சி.கம்பர், ஆனைமலை ஒன்றிய பொறுப்பாளர் ர.சாதிக், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ், கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை பி.தினகரன்,
இ.சி.எ.பாசறை ஒன்றிய ம.சதீஷ்குமார்,
பொள்ளாச்சி நகர நிர்வாகிகள் அன்சார், அபூபக்கர் சித்திக், சையது இப்ராஹிம் ஒன்றிய நிர்வாகிகள்
ப.முத்துக்குட்டி, மணிவேல்,பெ. மாரியப்பன், ம. சிவராஜ்,ப.குமார் ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.