தர்மபுரியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை எம். குமார் மாவட்ட தலைவர், சிறப்புரை சாமி நடராஜன் மாநில பொதுச் செயலாளர், சோ. அர்ஜுனன் மாவட்ட செயலாளர், கே. என். மல்லையன் மாவட்ட துணை தலைவர், சி. வஞ்சி மாவட்ட பொருளாளர், எஸ். தீர்த்தகிரி மாவட்ட துணைத் தலைவர், நன்றி உரை பி. ரவி ஒன்றிய செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் வலியுறுத்தியதாவது பல லட்சம் விவசாயிகளை பாதிக்கும் யானை வழித்தட விரிவாக்கத்தை கைவிட வேண்டும் என்றும், வனவிலங்குகளால் ஏற்படும் உயிர் சேதம், பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும் எனவும், தமிழ்நாட்டில் 2017-ல், 18 யானை வழித்தடங்கள்இருப்பதாக அறிவித்தனர். 2023-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 20 யானை வழித்தடங்கள் இருப்பதாக கூறினார்கள். தற்போது ஒன்பது மாவட்டங்களில் 42 யானை வழித்தடங்கள் என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர். ஆறு நாட்கள் மட்டுமே விவசாயிகள் கருத்து கூறுவதற்குஅனுமதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி, கோயம்புத்தூர் ,ஈரோடு , தருமபுரி ,கிருஷ்ணகிரி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை ஆகிய ஒன்பது மாவட்டங்களில் வனத்துறை அறிவித்துள்ள புதிய யானை வழித்தடங்களில் விவசாய நிலங்கள்,குடியிருப்புகள் உள்ளன. யானை வழித்தடங்களை 42 ஆக
விரிவுபடுத்தி அறிவித்த வனத்துறை அங்குள்ள விவசாய நிலங்கள், மனித வாழ்விடங்களை கையகப்படுத்தி அங்குள்ள மக்களை அகற்றிட வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலும் பாலக்கோடு, பென்னாகரம் தாலுக்காவிற்கு உட்பட்ட நூற்றுக்கணக்கான மக்களின் வாழ்விடங்கள் அகற்றப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.பல தலை முறைகளாக வாழ்ந்து வரும் மக்களின் குடியிருப்புகள், விவசாய நிலங்களை வன உரிமை சட்டப்படி பட்டா கொடுத்து மக்களை பாதுகாப்பதற்கு பதிலாக அவர்களை நில வெளியேற்றம் செய்வது கடும் கண்டனத்திற்குரியது. எனவே அறிவிக்கப்பட்டுள்ள யானை வழித்தட விரிவாக்கத்தை உடனடியாக மாநில, ஒன்றிய அரசுகள் திரும்பப் பெற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.